வழிபாடு
ஆனைக்கா அகிலாண்டேசுவரி

ஆனைக்கா அகிலாண்டேசுவரி

Published On 2022-02-23 04:32 GMT   |   Update On 2022-02-23 04:32 GMT
ஆனைக்கா என்னும் பெயரையொட்டியே வடமொழியில் இத்தலத்தைத் கஜாரண்ய சேத்திரம் என்று கூறினர். திருத்தலத்தில் கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அன்னையின் திருப்பெயர் அகிலாண்டேசுவரி.
பூலோக வைகுந்தம் என்று போற்றப்படுகின்ற திருவரங்கத்துக்கு அருகில் காவிரிக்கரை ஓரத்தில் திருவானைக்கா என்ற சிவத்தலம் உள்ளது. கா என்பது சோலை என்று பொருள்படும். காவிரியாற்றின் இடையே யானை உலவும் நெடுஞ்சோலை ஒன்று இருந்துள்ளது. அதனால் அதனை ஆனைக்கா என்ற பெயரால் அழைத்துள்ளனர்.

பழங்காலத்தில் வளம் நிறைந்த பயன்தரும் மரம், சோலைகள் போன்றவை இறைவன் உறையும் கோவில்கள் ஆயின. சோழநாட்டில் உள்ள நெல்லி மரச்சோலை திரு நெல்லிக்கா என்றும், குரங்காடும் பழஞ்சோலை குரக்குக்கா என்றும், (குரக்கினம் குதிகொள்ளும் குரக்குக்கா -தேவாரம்) ஆனை உலவிய சோலையை ஆனைக்கா என்றும் அழைத்தனர்.

ஆனைக்கா என்னும் பெயரையொட்டியே வடமொழியில் இத்தலத்தைத் கஜாரண்ய சேத்திரம் என்று கூறினர். திருத்தலத்தில் கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அன்னையின் திருப்பெயர் அகிலாண்டேசுவரி. இறைவனின் திருப்பெயர் ஜம்புகேசுவரர். இருவர் கோவில்களும் தனித்தனியே அமைந்து இணைந்த ஒரு பெருங்கோவிலாகத் திகழ்கின்றது.
Tags:    

Similar News