ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா:10 நாட்கள் கல்யாண உற்சவம் ரத்து

Published On 2020-09-25 02:55 GMT   |   Update On 2020-09-25 02:55 GMT
திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு கல்யாண உற்சவம் ரத்து செய்யப்படுகிறது என்றும், விழா முடிந்தவுடன் வழக்கம்போல் கல்யாண உற்சவம் நடைபெறும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (அக்டோபர்) 16-ந் தேதி முதல் 24-ந் தேதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவும், 25-ந் தேதி பாரிவேட்டை உற்சவமும் நடக்கிறது. கோவிலில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகிறவர்களுக்கு கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது.

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு கல்யாண உற்சவம் ரத்து செய்யப்படுகிறது என்றும், விழா முடிந்தவுடன் வழக்கம்போல் கல்யாண உற்சவம் நடைபெறும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News