ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் ரத்து

Published On 2020-10-30 07:33 GMT   |   Update On 2020-10-30 07:33 GMT
கொரோனா தொற்றினால் ஊரடங்கு அமலில் உள்ளதால் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பவுர்ணமி நாளான நாளை கிரிவலம் வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறும். அதே நாளில் பவுர்ணமி கிரிவலமும் நடைபெறும். அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கிரிவலம் வந்து சிவபெருமானை தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டிற்கான பவுர்ணமி கிரிவலம் மற்றும் அன்னாபிஷேகம் நடைபெறக்கூடிய நாளான நாளை(சனிக்கிழமை) அமைகிறது. ஆனால் கொரோனா தொற்றினால் ஊரடங்கு அமலில் உள்ளதால் பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகம் வழக்கம்போல கோவிலுக்குள் நடைபெறும். அதில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. எனவே பவுர்ணமி நாளான நாளை கிரிவலம் வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று கோவில் துணை கமிஷனர்(பொறுப்பு) ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News