உள்ளூர் செய்திகள்
நான்கு வழிப்பாதை சாலைகளில் மோட்டார் சைக்கிளில் வித்தை காட்டும் இளைஞர்கள்.

4 வழிப்பாதை சாலைகளில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் சாகசம்

Published On 2022-01-13 10:23 GMT   |   Update On 2022-01-13 10:23 GMT
சோழபுரம் அருகே நான்கு வழிப்பாதை சாலைகளில் மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணம்:

சிறு வயதிலேயே மோட்டார் சைக்கிள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட 
நகர்ப்புற இளைஞர்கள் சிலர் வருங்காலத்தில் பைக் ரேஸராக 
வர வேண்டும் என்ற கனவில் இருந்து வருகின்றனர். 

இளைஞர்கள் தற்போது பைக் ரேஸ் பயிற்சிகளுடன், ஸ்கீம் பைக் 
மற்றும் ஒற்றை சக்கரத்தில் வீலிங் செய்யும் நகரப்புற இளைஞர்களை 
பார்த்து தற்போது கிராமப்புற இளைஞர்களும் ஆர்வம் காட்டி 
வருகின்றனர்.

இந்நிலையில் கும்பகோணம் அடுத்த சோழபுரம் அருகே விக்கிரவாண்டி தஞ்சை நான்கு வழிப் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. 

திருப்பனந்தாள் அருகே விளந்தகண்டம் 4 வழிப் பாதை பணிகள் 
நடைபெற்று முற்றுப்பெறாத சாலைகளில் சில இளைஞர்கள் 
மாலை நேரங்களில் பைக்ரேஸ் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லூரிகளுக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் இளைஞர்கள் 
வேகமாக செல்லக் கூடாது என எச்சரிக்கை செய்து பதட்டத்துடன் 
இருந்து வரும் பெற்றோர் மத்தியில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டு 
அவர்களது கனவை முடக்கி போட்டு விடும் என்ற அச்ச 
உணர்வுடன் இருந்து வருகின்றனர். 

இதுபோன்ற சாகசங்களால் எதிர்பாராத விபத்து ஏற்பட்டு கிராமப்புற இளைஞர்களின் எதிர்காலம் முடங்கிவிடும் அபாயம் உள்ளது.

எனவே கிராமப்புற இளைஞர்கள் பைக் ரேஸிலிருந்து ஒதுங்கி படிப்பில்  கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News