செய்திகள்
விராட் கோலி

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் கடினமானது - விராட் கோலி உருக்கமான வேண்டுகோள்

Published On 2020-03-28 09:26 GMT   |   Update On 2020-03-28 09:26 GMT
அரசின் உத்தரவை கடைப்பிடித்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வீடியோ மூலம் மீண்டும் ஒரு முறை மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மத்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்தியது.

ஆனால் இந்த உத்தரவை மதிக்காமல் சிலர் கும்பலாக வெளியே சுற்றுகிறார்கள். இதனால் பல்வேறு விழிப் புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரசின் உத்தரவை கடைப்பிடித்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வீடியோ மூலம் மீண்டும் ஒரு முறை மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது;-

நான் ஒரு கிரிக்கெட் வீரராக பேசவில்லை. இந்திய குடிமகனாக பேசுகிறேன். கடந்த சில தினங்களாக மக்கள் கும்பலாக செல்வது, ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் நடப்பது, அரசை மதிக்காமல் செயல்படுவது போன்றவை கொரொனாவுக்கு எதிரான போராட்டத்தை நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளதையே காட்டுகிறது.

ஆனால் உண்மையிலேயே இந்தப்போராட் டம் சுலபமானது இல்லை. கடினமான போராட்டமாகும். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லோரும் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும். மேலும் அரசு கொடுக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

நீங்கள் அசட்டுத்தனமாக வெளியே சுற்றுவதனால் உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படலாம். இதனால் வீட்டிலேயே இருங்கள்.

நாம் நமது கடமையை செய்தால் மட்டுமே இந்த போராட்டத்தில் வெற்றி பெற முடியும். விதிகளை மீறுவது நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுவதாகும். உங்களைப் போலவே நானும் தற்போது உள்ள சூழல் சரியாக வேண்டும் என்று விரும்புகிறேன்.

எனவே அரசின் வழிகாட்டு தலை கடைப்பிடித்து நடக்க வேண்டும்.

இவ்வாறு விராட்கோலி கூறியுள்ளார்.

இதற்கிடையே கொரோனா பாதித்தவர்களை தர்ம சங்கடப்படுத்த வேண்டாம். விரும்பத்தகாதவர்களாக கருத வேண்டாம் என்று கிரிக்கெட் சகாப்தம் தெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;-

கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை நேசிக்க வேண்டும் என்பது ஒரு சமூகமாக நம் அனைவரது பொறுப்பாகும். அவர்கள் தங்களை நினைத்தே தர்ம சங்கடப்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்களும் முன் எச்சரிக்கையுடன் இருங்கள். அதே நேரத்தில் அவர்களை விரும்பத்தகாதவர்களாக கருதும் சூழலை ஏற்படுத்தி விடக்கூடாது.

ஒன்றிணைந்து நாம் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுமே தவிர பாதிக்கப்பட்டவர்களை சமூக நலன்களில் இருந்து தள்ளிவைக்க வேண்டும் என்பதல்ல.

கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் நாம் ஒன்றிணைந்து சேர்ந்தால் தான் வெல்ல பெற முடியும். தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க முடியும்.

இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.

அவர் ரூ 50 லட்சம் நன் கொடையையும் அளித்துள்ளார்.

நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செர்பிய மக்களுக்காக ரூ 8 கோடி நிதியுதவி அறிவித்து உள்ளார். ஏற்கனவே பல்வேறு விளையாட்டு பிரபலங்கள் நிதி உதவிகளை வாரி வழங்கி இருந்தனர்.
Tags:    

Similar News