செய்திகள்
கோப்புபடம்

பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக ரேசன் கடைகளில் அரிசி விவரம் பட்டியல்

Published On 2021-07-12 09:09 GMT   |   Update On 2021-07-12 09:09 GMT
கடந்த மே, ஜூன் மாதங்களில் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.
பல்லடம்:

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. அந்தியோதயா அன்னயோஜனா பிரிவுக்கு மாதம் 35 கிலோவும், முன்னுரிமை அட்டைதாரருக்கு 5 கிலோவும், இதர முன்னுரிமை அற்ற அட்டைதாரருக்கு 20 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது. கொரோனா இரண்டாம் அலை பாதிப்பை கருத்தில் கொண்டு, கடந்த மே, ஜூன் மாதங்களில் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதுபோன்ற கூடுதல் அரிசி, மற்றும் அத்தியாவசிய பொருட்கள், நிவாரணம் உள்ளிட்டவை குறித்த விவரங்களை ரேஷன் கடைகளில் உள்ள அறிவிப்பு பலகைகளில் தெரியப்படுத்த வேண்டும்.

ஆனால் பெரும்பாலான கடைகளில் இவை பின்பற்றப்படுவதில்லை. இதனால் மக்களுக்கும் விழிப்புணர்வு இல்லாமல் போகிறது. பல்லடம் வட்டாரத்தில் உள்ள சில ரேஷன் கடைகளில் அரிசி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரேஷன் அட்டையில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, எந்த வகை கார்டுக்கு, வழக்கமாக வழங்கப்படும் அரிசி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் கூடுதல் அரிசி குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பட்டியலை அனைத்து ரேஷன் கடைகளிலும் இடம் பெற செய்ய வேண்டும். இதுதவிர அத்தியாவசிய பொருட்களின் அளவு, விலை, இருப்பு உள்ளதா? என்பது குறித்தும் அறிவிக்க வேண்டும். சமீப காலமாக ரேஷன் கடைகள் மீது முறைகேடு புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க பொருள் வழங்குவது குறித்து வெளிப்படையான வழிமுறைகளை பின்பற்றவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News