வழிபாடு
குடமுழுக்கு விழா நடந்ததையும், இ்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

யானைமேல் அழகர் அய்யனார் கோவில் குடமுழுக்கு விழா

Published On 2022-03-22 04:05 GMT   |   Update On 2022-03-22 04:05 GMT
ஒரத்தநாடு - புதூர் யானை மேல் அழகர் அய்யனார் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு- புதூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற யானைமேல் அழகர் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் ரூ.3 கோடி செலவில் புனரமைப்பு செய்யப்பட்டு, யானை மேல் அழகர் அய்யனார் கோவில் கருங்கல் திருப்பணி சேவிக்கப்பட்டும், இதன் பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன், முன்னடியான், கருப்பண்ணசாமி, பாண்டிமுனி, சடைமுனி, இடும்பன், துவாரபாலகர், குதிரை, யானை போன்றவைகளும் சிறப்பாக அமைக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தது.

அதனை தொடர்ந்து இக்கோவிலின் குடமுழுக்கு விழா நேற்று காலை நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும், கடம் புறப்பட்டு, தாரை தப்பட்டங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு விழா கோலாகலத்துடன் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த குடமுழுக்கு விழாவின் போது கோவில் கோபுரத்தின் மேல் வானில் பறந்த ஹெலிகாப்ரில் இருந்து பக்தர்கள் மீது பூக்கள் தூவப்பட்டது. இதனால் பக்தர்கள் ஆனந்த பரவசம் அடைந்தனர்.

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. மேலும் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தும் பக்தர்கள் வழிபட்டனர். நிகழ்ச்சியில் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்களும், புதூர் கிராம மக்களும் செய்திருந்தனர்.
Tags:    

Similar News