தொழில்நுட்பம்
ஐபோன் 13

ஐபோன் 13 உற்பத்தியை நிறுத்தும் ஆப்பிள்?

Published On 2021-10-14 03:45 GMT   |   Update On 2021-10-13 11:18 GMT
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13 சீரிஸ் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஆப்பிள் தனது சாதனங்களுக்கு சிறந்த முறையில் உதிரிபாகங்களை பெறுவதில் பிரசித்தி பெற்ற நிறுவனம் ஆகும். எனினும், தற்போது உலக சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட் குறைபாடு பிரச்சினையில் ஆப்பிள் நிறுவனமும் சிக்கியுள்ளது. சிப்செட் குறைபாடு காரணமாக ஆப்பிள் ஐபோன் உற்பத்தியை நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிராட்காம் மற்றும் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் போன்ற நிறுவனங்களிடம் இருந்து உதிரிபாகங்களை பெறுவதில் ஆப்பிள் நிறுவனம் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஐபோன் 13 சீரிசுக்கு கடும் வரவேற்பு கிடைப்பதை தொடர்ந்து இரு நிறுவனங்களால் ஆப்பிளுக்கு தேவையான உதிரிபாகங்களை வினியோகம் செய்ய முடியவில்லை என தெரிகிறது.



செப்டம்பரில் விற்பனைக்கு வந்த ஐபோன் 13 ப்ரோ மாடல்கள் தற்போதைய சூழலில், அக்டோபர் மாத இறுதியில் தான் வினியோகம் செய்யப்படும் என்ற நிலையில் உள்ளது. பெரும்பாலான ஆப்பிள் ஸ்டோர்களில் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் பட்டியலிடப்படவே இல்லை.
Tags:    

Similar News