செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் கோழிக்கறி கிலோ ரூ.260 ஆக உயர்வு

Published On 2021-07-18 07:22 GMT   |   Update On 2021-07-18 07:22 GMT
பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் கறிக்கோழிகளை ஏற்றி வரும் வாகனங்களின் டீசல் செலவு அதிகமாகி உள்ளது. அதே நேரத்தில் கோழித் தீவனத்தின் விலையும் உயர்ந்துள்ளது.

சென்னை:

சென்னையில் இன்று கோழிக்கறி விலை ரூ.260 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த விலை உயர்வு நீடித்து வருகிறது.

கறிக்கோழியின் விலை கடந்த வாரம் ரூ.200 ஆக உயர்ந்து இருந்தது. அதற்கு முன்பு கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு 1 கிலோ கோழிக்கறி ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சென்னை ஆட்டு இறைச்சி சில்லரை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் அன்வர் பாஷா குரைசி கூறும்போது, ‘‘வரத்து குறைவாக இருப்பது விலை உயர்வுக்கு காரணம்’’ என்று கூறினார்.

பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் கறிக்கோழிகளை ஏற்றி வரும் வாகனங்களின் டீசல் செலவு அதிகமாகி உள்ளது. அதே நேரத்தில் கோழித் தீவனத்தின் விலையும் உயர்ந்துள்ளது.

இதுபோன்ற காரணங்களும் கோழிக்கறி விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News