செய்திகள்
கோப்புபடம்

விருதுக்கான தேர்வு-உடுமலை நகராட்சியில் அதிகாரிகள் குழு ஆய்வு

Published On 2021-07-30 10:06 GMT   |   Update On 2021-07-30 10:06 GMT
ஆய்வு செய்த அனைத்து தகவல்களும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு மென் பொருளில் ஏற்றப்படுகிறது.
உடுமலை:

தமிழகத்தில் சிறந்த நகராட்சிக்கான முதல்வர் விருதுக்கான தேர்வு நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் உடுமலை நகராட்சி முதல்வர் விருது பெறுவதற்கான முயற்சி செய்து வருகிறது. இதனை ஆய்வு செய்ய சேலம், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சுல்தானா, நாமக்கல் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் மற்றும் தர்மபுரி, கரூர், கொமாரபாளையம், நரசிங்காபுரம் நகராட்சிகளிலுள்ள பொறியாளர், கணக்கர், நகரமைப்பு ஆய்வர், துப்புரவு அலுவலர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த அதிகாரிகள் குழு ஒவ்வொரு துறையாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரத்துறையில் 33 வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை சேகரித்தல், மறு சுழற்சி பணி மற்றும் மேலாண்மையில் நகராட்சியின் செயல்பாடு மற்றும் குடிநீர் வழங்கல், வருவாய் பிரிவு செயல்பாடு, வருவாய் உயர்வுக்கு நகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகள், நகரமைப்புத்துறையில், ரோடு, பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

ஆய்வு செய்த அனைத்து தகவல்களும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு மென் பொருளில் ஏற்றப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் உயர் அதிகாரிகள் சிறந்த நகராட்சிகளை தேர்வு செய்வர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News