செய்திகள்
பிரதமர் மோடி, சத்தீஸ்கர் மந்திரி சிங் தியோ

பிரதமர் மோடியின் உரைக்கு மாநில அரசுகளின் கருத்துகள்....

Published On 2021-06-07 13:40 GMT   |   Update On 2021-06-07 13:40 GMT
இந்தியாவில் தயாரிக்கப்படும் 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அப்போது கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கும் என அறிவித்தார். மாநில அரசுகளின் கோரிக்கைகள் இதன்மூலம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு மாநில அரசுகள் கருத்து தெரிவித்துள்ளன. அதைப் பார்ப்போம்...

சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை மந்திரி டிஎஸ் சிங் தியோ,

அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி என்பதை 6 மாதத்திற்கு முன்னதாகவே அமல்படுத்தியிருக்க வேண்டும் ஆனால், முடியாது என்ற நிலையில் இருந்து காலதாமதமாக வந்திருக்கிறது. முன்னதாக தடுப்பூசி கொள்கையில் மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை. தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீத தடுப்பூசி என்பது மிகவும் அதிகமானது.

ஆம் ஆத்தி எம்எல்ஏ ராகவ் சதா

சுப்ரீட் கோர்ட் மத்திய அரசை கடுமையான சாடியபின், இந்த முடிவை எடுத்துள்ளது. நாங்கள் இந்த முடிவை வரவேற்கிறோம். நாங்கள் தேசிய அளவிலான தடுப்பூசி திட்டத்தை கோரினோம். சுப்ரீட் கோர்ட் நடவடிக்கையால் மத்திய அரசு தற்போது விழித்துள்ளது.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

தடுப்பூசி அறிவிப்பு மற்றும் பிரதான் மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா அறிவிப்பு ஆகியவற்றால் பிரதமர் மோடிக்கு எனது நன்றியை வெளிப்படுத்துகிறேன்.

ஐஎம்ஏ தலைவர் டாக்டர் ஜே.ஏ. ஜெயபால்

இந்திய அரசால் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டம் அறிவிப்புக்க நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். பிரதமரின் தடுப்பூசி முயற்சிக்கு ஐஎம்ஏ தொடர்ந்து ஆதரவாக இருக்கும்.

கர்நாடக துணை முதல்வர் டாக்டர் அஷ்வத்நாராயணன்

விரைவாக மாநிலங்கள், இளைஞர்கள் கொரோனா தடுப்பூசியை பெறுவார்கள் என்பதை பிரதமர் மோடி உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் மாநில அரசுகள் உலகளாவிய டெண்டர்களை கோர வேண்டியதில்லை.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

ஜூன் 21-ந்தேதியில் இருந்து அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி என்று பிரதமர் அறிவித்திருப்பது, இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமானது. எங்களுடைய வேண்டுகோளுக்கு பிரதமரிடம் இருந்து நேர்மறையான பதில் கிடைத்திருப்பதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இலவச தடுப்பூசி, பிரதான் மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் நீட்டிப்பு ஆகியவற்றை அறிவித்த பிரதமருக்கு என்னுடைய நன்றி. இது கொரோனாவை எதிர்க்கும் போரில் உதவிகரமாக இருக்கும்.


Tags:    

Similar News