வழிபாடு
நடராஜர் கோவிலில் அதிருத்ர பாராயணம்

நடராஜர் கோவிலில் அதிருத்ர பாராயணம்

Published On 2022-02-10 08:45 GMT   |   Update On 2022-02-10 08:45 GMT
காலை, மாலை இருவேளை நடைபெற்ற யாகத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வேத பிராமணர்கள் கலந்து கொண்டு மந்திரங்கள் சொல்லி பாராயணம் செய்தனர்.
உலக மக்களின் துன்பங்கள், சகல தீமைகளும் விலகி கொரோனா பெரும் தொற்றிலிருந்து அனைவரும் தங்களை காத்துக்கொண்டு இயற்கையான வாழ்க்கை வாழ வேண்டியும், உலகம் நன்மை பெறவேண்டியும் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் சார்பில் அதிருத்ர ஜப பாராயணம் தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

இதையொட்டி காலை, மாலை இருவேளை நடைபெற்ற யாகத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வேத பிராமணர்கள் கலந்து கொண்டு மந்திரங்கள் சொல்லி பாராயணம் செய்தனர். இந்த நிகழ்ச்சி வருகிற 15-ந்தேதி வரை நடக்கிறது. மேலும் அன்றைய தினம் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மாசி மாத மகாபிஷேகமும், லட்ச ஹோமமும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி முதல் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோடி அர்ச்சனை தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News