சமையல்
குடைமிளகாய் சட்னி

செரிமானத்திற்கு உதவும் குடைமிளகாய் சட்னி

Published On 2022-01-04 05:25 GMT   |   Update On 2022-01-04 05:25 GMT
குடைமிளகாயில் குறைந்த அளவே கலோரியும் கொழுப்பும் உள்ளது. குடைமிளகாய் செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இது வாய்வு தொல்லையை போக்கி மலச்சிக்கலை தடுக்கிறது.
தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் - 100 கிராம்,
குடைமிளகாய் - 1,
பச்சைமிளகாய் - 2,
தக்காளி - 1,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு, எண்ணெய் - தாளிக்க,
கடுகு - 1/4 டீஸ்பூன்.

செய்முறை

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

குடைமிளகாயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

அடுத்து அதில் நறுக்கிய குடைமிளகாய், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

வதக்கிய பொருட்கள் ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்து சட்னியை போட்டு வதக்கி பரிமாறவும்.

சூப்பரான குடைமிளகாய் சட்னி ரெடி.
Tags:    

Similar News