செய்திகள்
சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப்

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் ரெயிலில் பயணம் செய்ய அனுமதி -மகாராஷ்டிரா அரசு பரிசீலனை

Published On 2021-07-29 15:10 GMT   |   Update On 2021-07-29 15:10 GMT
மகாராஷ்டிராவில் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் செயல்படும் நேரத்தை நீட்டிப்பது குறித்து நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்கி உள்ளனர்.
மும்பை:

நாடு முழுவதும் கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக அனைவருக்கும் இலவச தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு நிலவரத்திற்கு ஏற்ப மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. அவ்வகையில் மகாராஷ்டிராவில் முழுமையாக இரண்டு தடுப்பூசிகளைப் போட்டவர்களை ரெயிலில் பயணம் செய்ய அனுமதிக்கலாம் என்று பேரிடர் மேலாண்மை துறை கூறி உள்ளது.

இதுபற்றி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தற்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் ரெயில் போக்குவரத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

பாதிப்புகள் குறைந்ததை அடுத்து மாநிலத்தின் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு, 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை உள்ளூர் ரெயில் பயணம் செய்ய அனுமதிக்கலாம் என பேரிடர் மேலாண்மை துறை கூறி உள்ளது. எனினும் இது தொடர்பான இறுதி முடிவை முதல்வர் உத்தவ் தாக்கரே எடுப்பார்.

இதேபோல் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் செயல்படும் நேரத்தை நீட்டிப்பது குறித்து நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்கி உள்ளனர்.

11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது. பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது அலை தொடங்கி உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. நமக்கும் அதே சவால்கள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News