உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

கும்பகோணத்தை மத்திய அரசின் பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும்

Published On 2022-04-16 08:00 GMT   |   Update On 2022-04-16 08:00 GMT
கும்பகோணம் மாநகரத்தை மத்திய அரசின் பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தொழில் வணிகர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கும்பகோணம்:

கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பின் முப்பரி-மான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு குடந்தை அனைத்து தொழில் வணிக சங்க கூட்டமைப்பு தலைவர்

சோழா. மகேந்திரன்தலைமை தாங்கினார். செயலாளர் சத்திய நாராயணன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் சு.ப. தமிழழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

 கொரோனா பாதிப்பு, ஆன்லைன் வர்த்தகம், சில்லறை வியாபாரத்தில் கார்ப்பரேட் ஆதிக்கம், மூலப்பொருட்களின் கடுமையான விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் வியாபாரிகள்

மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் சொத்து வரியை அதிக அளவில் விதிக்காமல் மிகக் குறைந்த அளவில் இணக்க வரியாக அமல்படுத்த வேண்-டும். தொழில் வரியையும்

மாதத்துக்கு  அதிகபட்சமாக ரூ.50 க்கு மேல் அதிகம் ஆகாமல் நிர்ணயிக்க வேண்டும். குப்பை வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். கழிவுநீர் வாய்க்கால்கள் கும்பகோணம் நகரில் பாசன மற்றும்

கழிவுநீர் வாய்க்கால்கள் முற்றிலுமாக தூர்வாரி தடையின்றி நீர் செல்வதற்கு ஏற்ற வகையில் வாய்க்கால்களை புனரமைப்பு செய்ய வேண்டும். மத்திய அரசின் பாரம்பரிய நகரங்களின் பட்டியலில்

கும்பகோணம் மாநகரத்தை சேர்த்து  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.  2028-ம் ஆண்டு நடைபெற உள்ள மகாமக விழாவையொட்டி நகரின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்யவும்,

புதிய திட்டங்களை செயல்படுத்தவும் கும்பகோணத்தை புத்தம் புதிய பொலிவுடன் நகரமாக மாற்றவும் உரிய நடவடிக்கைகளை இப்போதே தொடங்கி செயல்படுத்த கேட்பது என்பன உள்ளிட்ட

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News