லைஃப்ஸ்டைல்
முருங்கை கீரை மெது வடை

சூப்பரான ஸ்நாக்ஸ் முருங்கை கீரை மெது வடை

Published On 2020-10-09 09:27 GMT   |   Update On 2020-10-09 09:27 GMT
மாலை நேரத்தில் டீ, காபியுடன் சூடான வடை சாப்பிட அருமையாக இருக்கும். இன்று முருங்கை கீரை சேர்த்து மெது வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி - கால் கப்
உளுந்து - அரை கப்
ஆய்ந்த முருங்கை இலை - 1 கைப்பிடி
எள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை

உளுந்து, அரிசியை ஊற வைத்து, ஊறியதும் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரைத்த மாவில் முருங்கை இலை, உப்பு, எள், ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறு உருண்டையாக உருட்டி வடை போல் தட்டி, போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான முருங்கைக்கீரை வடை ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News