லைஃப்ஸ்டைல்
குழந்தையின்மையை கண்டுபிடிக்க கருவறையின் உள் சென்று சோதனை செய்யும் முறை

குழந்தையின்மையை கண்டுபிடிக்க கருவறையின் உள் சென்று சோதனை செய்யும் முறை

Published On 2021-05-10 07:43 GMT   |   Update On 2021-05-10 07:43 GMT
மகளிர் மற்றும் மகப்பேறு துறையில் குழந்தையின்மையை கண்டுபிடிக்க அதிநவீன கருவிகள் இப்பொழுது இந்தியாவில் கிராமங்களில் கூட வந்துவிட்டது.
லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை வந்த பிறகு மருத்துவ துறையின் எல்லா பிரிவுகளிலும் அதிநவீன மருத்துவ முறைகள் சிறு கிராமங்களிலும் கூட கையாளப்படுகின்றன.

முதல் முதலில் லேப்ராஸ் கோபிக் மருத்துவ முறைகள் மகளிர் மற்றும் மகப்பேறு துறையில்தான் பிரபலமானது. குறிப்பாக லேப்ராஸ்கோபிக் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மிகவும் பிரபலம் அடைந்தது.

மகளிர் மற்றும் மகப்பேறு துறையில் குழந்தையின்மையை கண்டுபிடிக்க அதிநவீன கருவிகள் இப்பொழுது இந்தியாவில் கிராமங்களில் கூட வந்துவிட்டது. ஏன் பாவூர்சத்திரம் என்ற சிறிய ஊரில் கூட இந்த வசதி இப்பொழுது கிடைக்கிறது. இந்த நவீன முறையின் மூலம் கருவறைக்கு உள்ளே உள்ள நோய்கள், சிறு கட்டிகள், கருவறை குழாயில் அடைப்பு, சாதாரண முறையில் கண்டு பிடிக்க முடியாத காப்பர் டி போன்ற கருத்தடை சாதனங்களையும் மற்றும் கர்ப்பப்பையில் உள்ள எண்டோமெட்ரியல் பாலிப்புகள், மையோமோ கட்டிகள், கருவறையை இரண்டாக பிரிக்கும் சுவர்கள் (யூட்டரின் செப்டம்) போன்றவைகளை கண்டுபிடிக்கவும் அதை நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்யவும் இந்த நவீன முறைகள் உதவுகின்றன. இது பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த முறைக்கு ஹிஸ்டராஸ்கோபி என்று பெயர்.

ஹிஸ்டராஸ்கோபி என்றால் என்ன?

ஹிஸ்டராஸ்கோபி என்பது கருவறையின் உட்பகுதியை நவீன டெலஸ்கோப், நவீன கேமரா மற்றும் கேபிள் லைட்டுகள் மூலமாக சோதனை செய்யவும், அறுவை சிகிச்சை செய்யும் முறையுமாகும். இதில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து (முழு மயக்கமும் கொடுக்கலாம். இடுப்புக்கு கீழ்பகுதி மட்டும் மரத்துப் போகும்படியும் செய்யலாம்). மிகவும் சிறிய டெலஸ்கோப் கர்ப்பப்பையின் வாய் வழியாக (2.9 mm அளவு டெலஸ்கோப்) செலுத்தப்படுகிறது. டெலஸ் கோப்பின் மறுமுனையில் பக்கவாட்டின் லைட் கேபிள் இணைக்கப்படுகிறது. (ஆரம்ப காலத்தில் சாதாரண ஹேலோஜன் லைட்டுகள் பயன்படுத்தப்பட்டன. பிறகு LED லைட்டுகளும் தற்சமயம் செனான் என்ற லைட்டுகளும் பயன்படுத்தப்படுகிறது)

டெலஸ்கோப்பின் இன்னொரு முனையில் அதிநவீன கேமராக்கள் இணைக்கப்படுகின்றன. இந்த கேமராக்கள் அறிமுகமான நிலையில் சிங்கிள் சிப் கேமரா பயன்படுத்தப்பட்டது. அதில் மூன்று பிரைமரி கலர்களும் ஒரே கேபிள் வழியாக செலுத்தப்பட்டது. பிறகு மூன்று சிப் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. அதிலும் இரண்டு வகைகள் இருந்தன. த்ரி சிப் அனலாக், த்ரி சிப் டிஜிட்டல் கேமராக்களும் அறிமுகமாயின. இதில் பிரைமரி கலர்கள் மூன்றும் தனித்தனி பைபர் வழியாக சென்றன. இதனால் சிறு வியாதிகளையும் கூட நன்றாக கண்டுபிடிக்க உதவியது. ஆனால் தற்பொழுது ஹைடெ பனிசன் த்ரி டி போன்ற நவீன கேமராக்கள் வந்துவிட்டன.

இதனால் ஆரம்பத்திலேயே நோய்களைக் கண்டறியவும் அறுவை சிகிச்சை செய்யவும் முடிகிறது. இதில் ஹைடெபனி சன் த்ரிடி கேமராக்கள் கருவறையின் உட்பகுதியை பெரிதாக்கி காண்பிக்கிறது.

இந்த கேமராவின் மறுபகுதி மெடிக்கல் மானிட்டருடன் இணைக்கப்படுகிறது. இதனால் கருவறையின் உட்பகுதியை சினிமாவில் பார்ப்பது போல் டிவியில் பார்க்க முடிகிறது. பழைய காலங்களில் அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள் மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால் நவீன முறையில் பக்கத்தில் நிற்கின்ற மற்ற டாக்டர்களும் பார்த்து அறுவை சிகிச்சை செய்கின்ற டாக்டருக்கு ஆலோசனையும் வழங்கலாம்.

இதில் கருவறையின் உட் பகுதியை பெரிதாக்க கிளைசின் என்ற திரவம் பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் மோனோ போலார், பைபோலார் போன்ற டையத்தெரிமிய சாதனங்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது.

நன்மைகள்

கருவறை உட்பகுதியில் உள்ள மையோமா கட்டிகள், கருவறைக் குழாய் அடைத்து குழந்தை இல்லாமல் இருப்பதை சரி செய்யவும், கருவறை (இரண்டாக பிரிக்கும் சுவர் (யூட்டரின் செப்டம்) இதனால் அடிக்கடி அபாஷன் ஆகும்). இந்த கருவறையை பிரிக்கும் சுவரை நவீன டையத்தெரிமின் மூலமாகவோ சிசர் மூலமாகவோ சரிசெய்ய முடிகிறது.

எண்டோமெட்ரியல் பாலிப்பை அகற்றவும் கருவறையின் உட்பகுதியில் மறைந்துள்ள காப்பர் டி போன்ற கருத்தடை சாதனங்களை அகற்றவும் முடிகிறது. இந்த முறையில் எந்தவித வெளித்தழும்பும் ஏற்படுவதில்லை. கருவறை உட்பகுதியில் பையாப்சி கொண்ட சோதனைகளை செய்யவும் பயன்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையில் சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்திற்குள் வீடு திரும்பலாம்.

சுசிலா மருத்துவமனை, பாவூர்சத்திரம்
Tags:    

Similar News