உள்ளூர் செய்திகள்
கஞ்சா பறிமுதல்

சேலம் வந்த 2 ரெயில்களில் 26.5 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2022-01-07 05:01 GMT   |   Update On 2022-01-07 05:01 GMT
சேலம் வந்த 2 ரெயில்களில் 26.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா கடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:

சேலம் வழியாக வட மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் கஞ்சா உள்பட பல போதை பொருட்கள் ரெயில்களில் கடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து போதை பொருள் தடுப்பு போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் தீவிரமாக கண்காணித்து அதனை பறிமுதல் செய்து வருகிறார்கள். ஆனாலும் அதையும் மீறி போதை பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் ரெயில் சேலம் அருகே இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ரெயிலில் சோதனை செய்தபோது ஒரு பை அனாதையாக கிடந்தது. அதனை எடுத்து பார்த்தபோது அதில் 5.5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்தனர். ஆனால் அதனை கொண்டு வந்தவர் யார், என்பது தெரியவில்லை.

இதே போல தன்பாத்தில் இருந்து ஆலப்புழா நோக்கி சென்ற ரெயிலும் இன்று அதிகாலை சேலம் அருகே வந்தபோது ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் போதைபொருள் தடுப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில் கடத்தி செல்லப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்சா கடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News