ஆன்மிகம்
சந்திரிகா யோகம்

அபூர்வமான சந்திரிகா யோகம்

Published On 2019-06-28 06:39 GMT   |   Update On 2019-06-28 06:39 GMT
ஜோதிடம் குறிப்பிடும் அபூர்வமான யோகங்களில் சந்திரிகா யோகமும் ஒன்று. லட்சத்தில் ஒருவருக்கு இந்த யோகம் அமையலாம் என்று ஜோதிட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜோதிடம் குறிப்பிடும் அபூர்வமான யோகங்களில் சந்திரிகா யோகமும் ஒன்று. லட்சத்தில் ஒருவருக்கு இந்த யோகம் அமையலாம் என்று ஜோதிட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சந்திரனுக்கு (ராசிக்கு) இரண்டில் குருவும், சனியும் அமர்ந்துள்ள நிலையில், மூன்றாம் இடத்தில் செவ்வாய் மற்றும் எட்டாம் இடத்தில் சுக்ரன் அமர்ந்திருக்கும் நிலையில் சந்திரிகா யோகம் ஏற்படுகிறது.

கோள்சார ரீதியாக குருவும், சனியும் ஒருமுறை இணைந்து விலகிய பின்னர், மறுபடியும் இணைவதற்கு கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் ஆகும். மேலும், மூன்றாம் இடத்தில் செவ்வாய், எட்டாம் இடத்தில் சுக்ரன் ஆகியவையும் கச்சிதமாக அமர வேண்டும். குறிப்பாக, இந்த கிரகங்களுடன் மற்ற பாவக்கிரகங்கள் சம்பந்தம் ஏற்பட்டால், இந்த யோகம் சிறப்பான பலனை தராது.

அதன் அடிப்படையில் இதை அபூர்வமான யோகமாக சொல்கிறார்கள். இந்த யோக அமைப்பை பெற்றவர்கள் நல்ல பரம்பரையில் பிறந்தவராகவும், கவுரவம் மிக்க உயர் பதவிகளை வகிப்பவராகவும் இருப்பார். அரசாங்கத்தின் ஆதரவும், அதிகாரமும் பெற்றிருப்பார். பல்வேறு ஆலயங்களின் திருப்பணிகளை முன்னின்று செய்வார்.

பிறப்பு ஜாதக ரீதியாக எந்த ஸ்தானங்களுக்கு மேற்சொன்ன கிரகங்கள் சம்பந்தம் பெறுகின்றனவோ, அந்த பாவகத்தின் காரகப் பலன்களையும் சேர்த்தே இந்த யோகம் தருவதாக ஜோதிட வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

Similar News