செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

கடுமையாக தாக்கப்பட்ட நபர் - விளக்கம் கொடுத்த காவல் துறை

Published On 2021-06-18 07:25 GMT   |   Update On 2021-06-18 07:25 GMT
இளஞர் ஒருவரை கும்பல் கடுமையாக தாக்கும் வீடியோ உத்தர பிரதேச மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இளம் வாலிபரை ஒரு கூட்டத்தினர் கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் தாக்கப்பட்ட நபர் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் முஸ்லீம் நபரின் தாடியை அறுத்ததாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் வீடியோ உத்தர பிரதேச மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் உத்தர பிரதேச மாநிலத்தின் லோனி பகுதியில் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கி, அவரது தாடியை அறுத்த சம்பவம் வீடியோ வடிவில் வைரலானது. 



அந்த வகையில், தற்போது வைரலாகும் வீடியோவும் அங்கு எடுக்கப்பட்டதாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை ஆய்வு செய்ததில், அது டெல்லி மாநிலத்தின் ஜகாங்கிர்பூரி பகுதியில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. 

வீடியோவில் தாக்கப்படும் நபர் மிரட்டி பணம் பறிக்க முயன்றதற்காக அங்கிருந்தவர்கள் தாக்கினர். அந்த வகையில் இந்த வீடியோ உத்தர பிரதேச மாநிலத்தில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது. வைரல் வீடியோ தொடர்பாக மூன்று பேரை காசியாபாத் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் வேறு எந்தவிதமான மத பிரச்சினையும் இல்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News