செய்திகள்
கலெக்டர் சிவன்அருள்

நகராட்சிகளில் நடந்து வரும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்- கலெக்டர் சிவன்அருள் உத்தரவு

Published On 2020-10-08 12:18 GMT   |   Update On 2020-10-08 12:18 GMT
திருப்பத்தூர் மாவட்டத்தில் நகராட்சிகளில் நடந்து வரும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் சிவன்அருள் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய நகராட்சி வார்டு பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து நகராட்சி ஆணையாளர்களுக்கான மாதாந்திர பணி முன்னேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் திட்டத்தில் நடந்து வரும் பணிகளை மழைக் காலத்துக்குள் முடிக்க வேண்டும். 14-வது மத்திய நிதி ஆணையத்தின் பங்களிப்புடன் நடந்து வரும் 73 பணிகளில் முடிவுறாத பணிகளை நவம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும். தொடங்கப்படாத பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். ஒருங்கிணைந்த நகர் புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளையும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரிக்க கட்டமைப்புகளை அமைக்கும் பணிகளில் நிலவும் கால தாமதத்தையும், நுண்ணுயிர் செயலாக்க திட்டப்பணிகளையும், நகராட்சியில் குப்பை கழிவுகளை அகற்றும் பணி, குடிநீர் இணைப்புகள் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆகிய நகராட்சியில் அனைத்துக் குடியிருப்புகளுக்கு வழங்கும் பணியில் நிலுவையில் உள்ள பணியை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும், என கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர்கள் சத்தியநாதன், சென்னுகிருஷ்ணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் சற்குணம், உதவி பொறியாளர் மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News