செய்திகள்

சுகாதாரத்தில் சிறந்த மாநிலம் கேரளா - உ.பி. படுமோசம்

Published On 2019-06-25 10:11 GMT   |   Update On 2019-06-25 10:11 GMT
சுகாதாரத்தை பொருத்தமட்டில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் கேரளா, படுமோசமான மாநிலம் உத்தரப்பிரதேசம் என நிதி ஆயோக் மதிப்பிட்டுள்ளது.
புதுடெல்லி:

உலக வங்கியின் ஒத்துழைப்புடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் மத்திய நிதி ஆயோக் ஆண்டுதோறும் சுகாதாரம் தொடர்பான ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

நோய்கள் வருமுன் காத்தால், விழிப்புணர்வு உண்டாக்குதல், வந்த பின்னர் மேலும் பரவாமல் தடுத்தல், கட்டுப்படுத்தி, குணப்படுத்த அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் உள்ளிட்ட 23 அம்சங்களின் அடிப்படையில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

அவ்வகையில், கடந்த 2015-16 ஆண்டுகளை அடிப்படையாக வைத்து  2017-18 ஆண்டுகளை மேற்கோளாக காட்டி இந்த ஆண்டு வெளியான அறிக்கையில் சுகாதாரத்தை பொருத்தமட்டில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் கேரளா என்றும் படுமோசமான மாநிலம் உத்தரப்பிரதேசம் எனவும் நிதி ஆயோக் மதிப்பிட்டுள்ளது.



கேரளாவுக்கு அடுத்தபடியாக முதல் மூன்று இடங்களில் ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
Tags:    

Similar News