ஆன்மிகம்
குலசேகரன்பட்டினம் கோவில் முன்பு கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

தசரா திருவிழா: குலசை கோவில் முன்பு மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்

Published On 2021-09-28 01:33 GMT   |   Update On 2021-09-28 06:55 GMT
கடலில் நீராடி, துளசி மாலை பாசி மாலை வாங்கி அதை கடலில் நனைத்து, சிவப்பு ஆடை அணிந்து கோவில் வளாகத்திற்கு வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கி விடுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் தசரா திருவிழா ஆகும்.

இந்த கோவிலில் வருகிற 6-ந்தேதி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 15-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. இந்த இரு நாட்களும் கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் வழக்கம் போல பக்தர்கள் மேளம், கரகம், காவடி, போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் தங்கள் சொந்த ஊரில் தசராவை கொண்டாடலாம் என்று அரசு அறிவித்து உள்ளது.

திருவிழாவையொட்டி மாலை அணியும் பக்தர்கள் கடந்த சில வாரங்களாகவே கோவிலுக்கு வந்து மாலை அணிந்து வருகின்றனர்.

நேற்றும் ஏராளமான பக்தர்கள் நண்பர்களுடன், குடும்பத்துடன், கார், வேன், இரு சக்கர வாகனத்தில் கோவிலுக்கு வந்து குவிந்துள்ளனர்.

கடலில் நீராடி, துளசி மாலை பாசி மாலை வாங்கி அதை கடலில் நனைத்து, சிவப்பு ஆடை அணிந்து கோவில் வளாகத்திற்கு வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கி விடுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்களில் சிகப்பு ஆடை அணிந்து விரதம் இருந்து வரும் தசராபக்தர்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர்.
Tags:    

Similar News