செய்திகள்
காதர் மொய்தீன்

தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்துகிறது- அதிமுக மீது காதர் மொய்தீன் குற்றச்சாட்டு

Published On 2019-07-31 04:25 GMT   |   Update On 2019-07-31 04:25 GMT
தோல்வி பயம் காரணமாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டு அ.தி.மு.க. அரசு தாமதப்படுத்தி வருகிறது என்று காதர் மொய்தீன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தின் உணர்வுக்கு மதிப்பு அளிக்காமல் இட ஒதுக்கீட்டை புறக்கணித்து சமூக நீதிக்கு இடம் அளிக்காமல் புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் வரைவு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கிறது. இந்த மசோதாவை அமலுக்கு கொண்டு வந்தால் கல்வி தனியார்மயமாகும். ஏழை , எளிய , வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படும். எனவே வரைவுக் கொள்கையில் திருத்தங்கள் கொண்டு வர தேவையில்லை. ஒட்டுமொத்தமாக புதிய கல்வி கொள்கையையே திரும்ப பெற வேண்டும்.

முத்தலாக் தடை சட்டத்துக்கு மக்களவையில் ஒரு நிலைப்பாடு, மாநிலங்களவையில் ஒரு நிலைப்பாடு என இரட்டை வேடத்துடன் அ.தி.மு.க. செயல்பட்டுள்ளது. எந்த மதத்தின் சட்டத்தையும் மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. தோல்வி பயம் காரணமாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டு தாமதப்படுத்தி வருகிறது அ.தி.மு.க. அரசு. உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க., கூட்டணியில் இணைந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News