வழிபாடு
சொர்க்கவாசல்

சொர்க்கவாசல் வடக்குப்புறம் அமைந்திருப்பது ஏன்?

Published On 2021-12-14 08:48 GMT   |   Update On 2021-12-14 08:48 GMT
பரமபதவாசல் வாசல் வழியாக வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் பிரவேசிக்கும்போது, பக்தர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள். இதனால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை
பெரும்பாலான வைணவ கோவில்களில் பரமபதவாசல் என்று ஒரு சன்னதி இருக்கும். இந்த வாசல் வடக்கு நோக்கி இருப்பதை காணலாம். இது மூடப்பட்டே இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி திதி அன்று மட்டும் இந்த கதவுகள் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக அன்று பெருமாள் பிரவேசிக்கும்போது, பக்தர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள். இதனால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஸ்ரீரங்கத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

‘உத்ரம்’ என்ற வடமொழி சொல்லானது வடக்கு திசையினை குறிக்கும். இந்த உத்ரம் என்ற பதத்திற்கு ‘ஸ்ரேஷ்டம்’ (உன்னதமானது) என்ற பொருளுண்டு. உத்தராயண புண்யகாலம் உன்னதமான காலம் என்று அழைக்கப்படுகிறது. இதனாலேயே மிக உன்னதமான இந்த வடக்கு திக்கு மோட்ச வாசலான வைகுண்ட வாசல் அமைய காரணமாயிற்று.

Tags:    

Similar News