ஆன்மிகம்
அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவ விழா கொடியேற்றம்

Published On 2019-12-18 06:03 GMT   |   Update On 2019-12-18 06:03 GMT
அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 25 கிலோ மீட்டர். தூரத்தில் கேரள மாநிலத்தில் அச்சன்கோவில் உள்ளது. இங்கே பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில்களில் ஒன்றான தர்மசாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மகோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழாவிற்காக ஐயப்பனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் நேற்று முன்தினம் மாலை அணிவிக்கப்பட்டன. நேற்று காலையில் வேத பாராயணம் நடைபெற்றது. பின்னர் தந்திரி கண்டரரு மோகனரு சிறப்பு பூஜைகள் நடத்தினார். இதைத்தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழா வருகிற 26-ந் தேதி வரை நடைபெறுகிறது.

வருகிற 25-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. மூன்றாம் திருநாள் முதல் ஒன்பதாம் திருநாள் வரை சப்பர வீதி உலாவின் போது கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் அன்னதானம் நடக்கிறது. வருகிற 26-ந் தேதி ஆராட்டு நடக்கிறது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழக, கேரள பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News