வழிபாடு
தேர் திருவிழாவில் பெரிய தேர், சின்ன தேர் திருவீதி உலா நடைபெற்ற போது எடுத்த படம்.

தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் தேர் திருவிழா

Published On 2022-04-01 03:45 GMT   |   Update On 2022-04-01 03:45 GMT
தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய திருத்தேர் திருவீதிஉலா கோட்டைமேடு வழியாக சென்று பண்ணை வீடு பகுதியை அடைந்தது.
தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா கடந்த 15-ந்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. 22-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து ஆயிரம் பானை பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் தலையலங்காரம் நேற்று முன்தினம் அதிகாலை நடைபெற்றது.நேற்று மாலை பெரிய தேர் மற்றும் சின்ன தேர் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பெரிய தேர் மற்றும் சின்னத்தேரை தலையிலும், தோளிலும் பக்தி பரவசத்துடன் சுமந்து சென்றனர். பெரிய தேரில் ஓலைப் பிடாரி அம்மனும், சின்ன தேரில் மதுரைகாளியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய திருத்தேர் திருவீதிஉலா கோட்டைமேடு வழியாக சென்று பண்ணை வீடு பகுதியை அடைந்தது. இதை தொடர்ந்து சந்தைபேட்டை, திருச்சி-சேலம் மெயின் ரோடு வழியாக சென்று வானப்பட்டறை மைதானம் சென்றது. இதையொட்டி வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டியம் பகுதியை சேர்ந்த பதினெட்டு பட்டி கிராம ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாகம் மற்றும் கோவில் பூசாரிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News