இது புதுசு
லம்போர்கினி சூப்பர்கார்

சத்தமின்றி எலெக்ட்ரிக் சூப்பர்கார் உருவாக்கும் லம்போர்கினி

Published On 2021-12-09 09:07 GMT   |   Update On 2021-12-09 09:07 GMT
லம்போர்கினி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் சூப்பர்கார் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


லம்போர்கினி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் சூப்பர்கார் மாடலை 2027 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக எலெக்ட்ரிக் கார் உருவாக்கி வருவதை லம்போர்கினி உறுதிப்படுத்தி இருந்தது. அந்த வரிசையில் இதன் வெளியீடு பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

'முழுமையாக எலெக்ட்ரிக் திறன் கொண்டு இயங்கும் லம்போர்கினியின் முதல் கார் 2027 அல்லது 2028 ஆண்டு வாக்கில் அறிமுகமாகும். பிளக்-இன் ஹைப்ரிட் மாடல்கள் இதற்கு முன்பே அறிமுகமாகிவிடும்,' என லம்போர்கினி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீபன் வின்கில்மேன் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.



எலெக்ட்ரிக் பிரிவில் கவனம் செலுத்த லம்போர்கினி நிறுவனம் 150 கோடி டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. லம்போர்கினி அறிமுகம் செய்த முதல் எஸ்.யு.வி. மாடல் சந்தையில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. இது விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட அனைத்து சந்தைகளிலும் அசத்தலான விற்பனையை பதிவு செய்து வருகிறது.
Tags:    

Similar News