செய்திகள்
கூட்டத்தில் பங்கேற்ற மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி மற்றும் பொதுமக்கள்.

மங்கலம் ஊராட்சியில் சமூக தணிக்கை குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம்

Published On 2021-11-23 09:46 GMT   |   Update On 2021-11-23 09:46 GMT
மங்கலம் ஊராட்சி சாலைகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளின் இருபுறமும் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மங்கலம்:

திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சியில் சமூக தணிக்கை தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் (2020-2021) நிதி ஆண்டில் மங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற பணிகளின் தொடர்பாக இந்த சமூக தணிக்கை கிராமசபை கூட்டம் நடைபெற்றது.  

கூட்டத்திற்கு மங்கலம் பகுதியை சேர்ந்த எபிசியண்ட் டி.சுப்பிரமணி தலைமை தாங்கினார். மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி முன்னிலை வகித்தார். 

இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி, சமூக தணிக்கை அலுவலர் ராஜேஸ்வரி, மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ரேவதிமுருகன், ராஜாபரமேஸ்வரன், மங்கலம் ஊராட்சி செயலாளர் ரமேஷ் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் .

கூட்டத்தில் மங்கலம் ஊராட்சி சாலைகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளின் இருபுறமும் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் தற்போது வழங்கப்படும் 100 நாட்களை 150 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கினர். பின்னர் இந்த மனு தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News