செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

அரசுப்பள்ளி ஆசிரியை, மாணவிக்கு கொரோனா

Published On 2020-10-17 08:36 GMT   |   Update On 2020-10-17 08:36 GMT
புதுவையில் அரசுப்பள்ளி ஆசிரியை மற்றும் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

5-வது கட்ட ஊரடங்கு தளர்வில் பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து புதுவையில் கடந்த 8-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதாவது அன்று முதல் ஒரு நாள் விட்டு ஒருநாள் 10, 12-ம் வகுப்புகளும், 12-ந்தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களும் சந்தேகம் கேட்கும் விதமாக பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சந்தேகம் கேட்க பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோர்கள் ஒப்புதலுடன் வரவேண்டும், முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அவ்வாறே கடந்த சில நாட்களாக மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜீவானந்தம் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் சுசீலாபாய் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும், வாதானூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர்கள் இருந்த வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளன. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News