ஆட்டோ டிப்ஸ்
லான்சியா ஃபுல்வியா பெர்லினா

47 ஆண்டுகள் - ஒரு இன்ச் அசையவில்லை - சுற்றுலா தளமான கார்

Published On 2021-12-20 09:19 GMT   |   Update On 2021-12-20 09:19 GMT
இத்தாலி நாட்டில் பயன்படுத்தாத நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் கார் மாடல் ஒன்று சுற்றுலா தளமாகி இருக்கிறது.


ஒரு கார் பயன்படுத்தாத நிலையில் இருந்தால், அது பாழாகி தான் போகும். எல்லோருக்கும் இது நன்றாகவே தெரியும். ஆனால், இங்கு மட்டும் பயன்படுத்தாத கார் ஒன்று மக்கள் பொழுதுபோக்கிற்காக வந்து காரை பார்த்து செல்லும் வகையில் சுற்றுலா தளமாகி இருக்கிறது.

1970-களில் உருவாக்கப்பட்ட லான்சியா ஃபுல்வியா பெர்லினா ஒரே இடத்தில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஓடோமீட்டரில் அதிக மைல்களை கடக்கவில்லை. எனினும், ஒரே இடத்தில் 47 ஆண்டுகளாக இந்த கார் நிறுத்தப்பட்டு இருக்கிறது. 



கடந்த 47 ஆண்டுகளில் இந்த கார் ஒரு இன்ச் அளவும் அசையவில்லை. இத்தாலி நாட்டின் காங்கிலியானோ பகுதியின் பொது நிறுத்தமிடத்தில் இந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உரிமையாளர் 2019 ஆம் ஆண்டு வரை செய்தித்தாள் ஸ்டாண்டை நடத்தி வந்துள்ளார். ஒவ்வொரு நாளும் இந்த காரில் செய்தித்தாளை வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் இந்த கார் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், 1974 முதல் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணமும் மர்மமாகவே இருக்கிறது. 
Tags:    

Similar News