செய்திகள்
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் டீன் சுகந்தி ராஜகுமாரி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட போது எடுத்த படம்.

குமரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவ கல்லூரி டீன்

Published On 2021-01-21 03:37 GMT   |   Update On 2021-01-21 03:37 GMT
குமரியில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
நாகர்கோவில்:

தமிழகத்தில் கடந்த 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 4 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அதாவது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தக்கலை அரசு ஆஸ்பத்திரி, குழித்துறை ஆஸ்பத்திரி ஆகிய 4 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. இந்த மையங்களில் முதல் நாளில் 55 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர். 2-வது நாளில் 44 பேரும், 3-வது நாளில் 141 பேரும், அதிகபட்சமாக நேற்று முன்தினம் 171 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்த நிலையில் 5-வது நாளான நேற்று 85 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் 65 பேரும், தக்கலையில் ஒருவரும், செண்பகராமன்புதூரில் 3 பேரும், குழித்துறையில் 16 பேரும் என மொத்தம் 85 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதன் மூலம் குமரி மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 496 ஆக உயர்ந்து உள்ளது.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட நேற்று மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆர்வமாக வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு கொண்டனர்.

முன்னதாக கல்லூரி டீன் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார். அதன்பிறகு மருத்துவ கண்காணிப்பாளர் அருள்பிரகா‌‌ஷ் மற்றும் டாக்டர்களும் தடுப்பூசி போட்டு கொண்டனர்.
Tags:    

Similar News