செய்திகள்
விண்கலம் தரையிறங்கியதை கொண்டாடும் நாசா விஞ்ஞானிகள்

நாசாவின் ‘பெர்சவரன்ஸ்‘ விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது

Published On 2021-02-18 21:44 GMT   |   Update On 2021-02-19 12:39 GMT
நாசாவின் பெர்சவரன்ஸ் என்ற விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது என நாசா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:

செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ‘பெர்சவரன்ஸ்‘ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும், இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்‘ விண்கலம் வெள்ளிக்கிழமை தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது என நாசா தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News