செய்திகள்
கோப்புபடம்

கொரோனா கட்டுப்பாடுகளால் ஒலிம்பிக் போட்டி ஆடை தயாரிப்பு ஆர்டர்களை இழந்த திருப்பூர் நிறுவனங்கள்

Published On 2021-07-26 08:57 GMT   |   Update On 2021-07-26 08:57 GMT
விளையாட்டு போட்டிகள் நடைபெறும் போது அதில் பங்கேற்கும் வீரர்கள் மட்டுமின்றி அந்த விளையாட்டு மீது அதிக பற்று கொண்ட ரசிகர் களும், விளையாட்டு ஆடைகளை விரும்பி வாங்கி அணிகின்றனர்.
திருப்பூர்:

சர்வதேச அளவில் விளையாட்டு போட்டி ஆடைகளின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆக்கி, கபடி, கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, நீச்சல், தடகளம், பனிச்சறுக்கு, கோல்ப், ஜிம்னாஸ்டிக் என   ஏராளமான விளையாட்டுகள் உள்ளன. ஒவ்வொரு விளையாட்டுக்கும் பிரத்யேக தன்மைகளுடன் கூடிய ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

விளையாட்டு போட்டிகள் நடைபெறும் போது அதில் பங்கேற்கும் வீரர்கள் மட்டுமின்றி அந்த விளையாட்டு மீது அதிக பற்று கொண்ட ரசிகர்களும், விளையாட்டு ஆடைகளை விரும்பி வாங்கி அணிகின்றனர்.

விளையாட்டு போட்டி சந்தை நிலவரங்களை நன்கு உணர்ந்து கொண்ட திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஐ.பி.எல். உள்ளிட்ட  விளையாட்டு போட்டிகளுக்கான ஆடை தயாரிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கினர். இதன் மூலம் விளையாட்டு ஆடைகள்  திருப்பூர் உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக வர்த்தகத்தை ஈட்டித்தருகிறது.

மேலும் உள்நாடு, வெளி நாடுகளில் பல்வேறு  விளையாட்டுப்போட்டிகள் நடைபெறும்போது விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் அணிவதற்கான ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் திருப்பூருக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது.

தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி  நடைபெற்று வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளால் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி சார்ந்த ஆடை தயாரிப்பு ஆர்டர்களை திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள்  இழந்துள்ளது.

இதுகுறித்து ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறுகையில், கொரோனா கட்டுப்பாடுகளால்  ஒலிம் பிக் போட்டி ஆடை தயாரிப்பு  ஆர்டர்களை  பின்னலாடை நிறுவனங்கள் இழந்துள்ளது. மேலும் ஆடை தயாரிப்பில் சர்வதேச அளவில்  கடுமையான  போட்டி ஏற்பட்டுள்ளது.  ஆடை தயாரிப்பில்  சீனா ஆதிக் கத்தை செலுத்தி வருகிறது.

எனவே திருப்பூர் பின்ன லாடை உற்பத்தியாளர்கள் பாலியெஸ்டர், நைலான், லைக்ரா போன்ற செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். 

புதுமையான ஆடை தயாரிப்பு சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு திட்டங்களை முடுக்கி விட வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் உள்நாட்டிலும், சர்வதேச சந்தையிலும், விளையாட்டு உள்ளிட்ட ஆடை தயாரிப்பில் புகுந்து விளையாடலாம் என்றனர்.
Tags:    

Similar News