செய்திகள்
இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 50 பேர் கலந்து கொள்ள அனுமதி

இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி

Published On 2020-06-01 13:57 GMT   |   Update On 2020-06-01 13:57 GMT
இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி பொது ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டது. தனிமனித இடைவெளி கட்டாயம் என்பதால் வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், மால்கள் போன்ற இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவார்கள் என்பதால் அவைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.

அதேபோல் திருமணங்கள், இறுதிச் சடங்கு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இறுதிச்சடங்களில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

2-வது, 3-வது மற்றும் 4-வது கட்ட ஊரடங்கின்போது பல தளர்வுகள் கொண்டு வந்த நிலையில் இறுதிச் சடங்கில் 20 பேருக்குமேல் கலந்து கொள்ளக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

வரும் 8-ந்தேதியில் மால்கள், ஓட்டல்கள் போன்றவைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறுதிச்சடங்கில் 50 பேர் கலந்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அப்போது தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
Tags:    

Similar News