தொழில்நுட்பம்
சாம்சங்

இணையத்தில் லீக் ஆன சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்

Published On 2020-01-13 04:10 GMT   |   Update On 2020-01-13 04:10 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. சாம்சங் நிறுவனத்தின் 2020 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் புதிய கேலக்ஸி எஸ்20 சீரிஸ் ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி ஒ AMOLED டிஸ்ப்ளே, நான்கு பிரைமரி கேமரா செவ்வக கேமரா பம்ப்பில் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பிரத்யேக பிக்ஸ்பி பட்டன் வழங்கப்படவில்லை. முந்தைய கேலக்ஸி எஸ் சீரிஸ் போன்களில் பிக்ஸ்பி பட்டன் வழங்கப்பட்டு இருக்கின்றன.

புதிய ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. 1.8μm பிக்சல், அல்ட்ரா வைடு சென்சார், டெலிபோட்டோ, மேக்ரோ லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போனின் பின்புறம் மைக்ரோபோன் சாம்சங்கின் சூம்-இன் மைக் அம்சம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



முன்னதாக கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனிலும் இதே அம்சம் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் 2.5டி வளைந்த கிளாஸ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கேலக்ஸி எஸ்20 சீரிஸ் போன்களை சாம்சங் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி வெர்ஷன்களில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் கேலக்ஸி எஸ்20 மற்றும் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் 5ஜி வேரியண்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 5ஜி மோடெம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

சில சந்தைகளில் புதிய ஸ்மார்ட்போன்களில் எக்சைனோஸ் 990 பிராசஸர், எக்சைனோஸ் மோடெம் 5123 மூலம் 5ஜி வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படம் நன்றி: Max Weinbach

Tags:    

Similar News