ஆட்டோமொபைல்
ஹூண்டாய் ஆரா

இந்தியாவில் 2021 ஹூண்டாய் ஆரா விலையில் திடீர் மாற்றம்

Published On 2021-04-09 09:28 GMT   |   Update On 2021-04-09 09:28 GMT
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் 2021 ஆரா மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


தென் கொரியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்திய சந்தையில் ஆரா சப்-காம்பேக்ட் செடான் மாடலை ரூ. 5.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலின் விலையை ஹூண்டாய் உயர்த்தி இருக்கிறது.

விலை உயர்வின் படி ஹூண்டாய் ஆரா மாடல் விலை ரூ. 5.96 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.34 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. விலை உயர்வுடன் 2021 ஆரா மாடலில் சில அம்சங்கள் நீக்கப்பட்டு இருக்கிறது.



2021 ஆரா மாடலில் புது ரியர் விங் ஸ்பாயிலர், எல்இடி ஸ்பாட்லைட் வழங்கப்படுகிறது. இதன் ஏஎம்டி வேரியண்ட்களில் 15 இன்ச் ஸ்டீல் ஸ்டைல் ரிம்கள் கன்மெட்டல் பினிஷூடன் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் ஏற்கனவே வழங்கப்பட்ட ஆம்கிஸ் ஆடியோ சிஸ்டம் நீக்கப்பட்டு இருக்கிறது. இதன் பேஸ் மாடலான இ வேரியண்டில் 13 இன்ச் ஸ்டீல் ரிம் கொண்ட ஸ்பேர் வீல் வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் ஆரா மாடல் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டீசல் என்ஜின் என மூன்றுவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 83 பிஹெச்பி பவர், 113 என்எம்  டார்க் செயல்திறன், 120 பிஹெச்பி பவர், 172 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 75 பிஹெச்பி பவர், 190 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News