செய்திகள்
மிட்செல் ஸ்டார்க்

பெர்த் பகல் இரவு டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவிப்பு

Published On 2019-12-13 10:20 GMT   |   Update On 2019-12-13 10:20 GMT
டிராவிஸ் ஹெட் அரைசதம், டிம் பெய்ன் 39, ஸ்டார்க் 30 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா, லாபஸ்சாக்னேயின் சிறப்பாக ஆட்டத்தால் முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்திருந்தது.

லாபஸ்சாக்னே 110 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. லாபஸ்சாக்னே 143 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்னில் வெளியேறினார்.



கேப்டன் டிம் பெய்ன் 39 ரன்னும், பேட் கம்மின்ஸ் 20 ரன்னும், மிட்செல் ஸ்டார்க் 30 ரன்னும் அடிக்க ஆஸ்திரேலியா 146.2 ஓவரில் 416 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி, நீல் வாக்னர் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினர்.
Tags:    

Similar News