ஆன்மிகம்
பெருமாள்

6-ம் தேதி வளர்ச்சிக்கு வித்திடும் வைகுண்ட ஏகாதசி விரதம்

Published On 2020-01-02 06:55 GMT   |   Update On 2020-01-02 06:55 GMT
ஏகாதசியன்று அதிகாலையில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டு, விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று, அங்குள்ள சொர்க்கவாசலில் நுழைந்து வந்தால் சிக்கல் தீரும். ரொக்கம் வந்து சேரும். சொர்க்க வாழ்வும் கிடைக்கும்.
மார்கழி மாதம் வருகின்ற வளர்பிறை ஏகாதசிக்கு, ‘வைகுண்ட ஏகாதசி’ என்று பெயர். அன்றைய தினம் சகல விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்க வாசலைத் திறந்து வைப்பார்கள். அதில் நுழைந்து வந்தால் சகல பாக்கியங்களும் நமக்குக் கிடைக்கும். திருவரங்கம் அரங்க நாதர் ஆலயத்தில் லட்சக்கணக்கான மக்கள் சொர்க்கவாசலில் நுழையக் காத்திருப்பார்கள். அன்று முழு நாளும் விரதமிருந்து இரவு முழுவதும் விழித்திருந்து, அவல் நைவேத்தியம் செய்து சாப்பிட்டால், நமது ஆவல்கள் அனைத்தும் பூர்த்தியாகும். குசேலனைக் குபேரனாக்கிய நாள்தான் வைகுண்ட ஏகாதசி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று, ஏகாதசியன்று அதிகாலையில் விஷ்ணுவை வழிபட்டு, அங்குள்ள சொர்க்கவாசலில் நுழைந்து வந்தால் சிக்கல் தீரும். ரொக்கம் வந்து சேரும். சொர்க்க வாழ்வும் கிடைக்கும்.

இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாதம் 21-ந் தேதி (6.1.2020) திங்கட்கிழமை வருகிறது. மறுநாள் துவாதசியன்று காலையில் பச்சரிசி சாதம் வைத்து, அகத்திக்கீரை, நெல்லிக்காய் சேர்த்த கருணைக்கிழங்கு குழம்பு வைத்து, சூரிய உதயத்திற்கு முன்பே விஷ்ணுவை வழிபட்டு உணவு அருந்துவது நல்லது. மதியம் பலகாரம் சாப்பிடுவதும் நன்மை தரும்.
Tags:    

Similar News