உள்ளூர் செய்திகள்
பாராட்டி சான்றிதழ் வழங்கிய காட்சி.

ஆடு திருடர்களை உடனடியாக கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு

Published On 2022-01-25 05:36 GMT   |   Update On 2022-01-25 05:36 GMT
ஆடு திருடர்களை உடனடியாக கைது செய்த தனிப்படை போலீசாரை பாராட்டி சான்றிதழ்களை டி.ஐ.ஜி. வழங்கினார்.
புதுக்கோட்டை:

ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை பிடித்த புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சராகம் திருமயம் சப் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான தனிப்படை போலீசாரை, திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டி பாராட்டு சான்றிதழை வழங்கினார்.  பிறகு அவர் தெரிவிக்கையில்,

திருச்சி சரகத்திற்குட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த நவம்பர் மாதம்  முதல் தற்போது வரை ஆடு திருட்டு தொடர்பாக காவல்துறையினர் தீவர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 14, புதுக்கோட்டை  மாவட்டத்தில் 14, பெரம்பலூர் மாவட்டத்தில் 5, கரூரில் 1 என  மொத்தம் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் 14 பேர் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.7லட்சத்து 35ஆயிரம் மதிப்புள்ள ஆடுகள் மீட்கப்பட்டுள்ளது என்றும். ஆடு திருட பயன் படுத்திய 3 கார்கள், 2 சரக்கு ஆட்டோக்கள், 3 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மீட்கப்பட்ட ஆடுகள் உரியவர்களிடம் முறையாக ஒப்படை க்கப்பட்டு. குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு அவர்  தெரிவித்தார்.
Tags:    

Similar News