ஆன்மிகம்
ஆதிவராகப் பெருமாள்

கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள்

Published On 2020-11-21 06:42 GMT   |   Update On 2020-11-21 06:42 GMT
அம்புஜவல்லி உடனாய ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில் என்று அழைக்கப்படும் இத்தலத்தில், மூலவராகவும் உற்சவராகவும் ஆதிவராகப் பெருமாள் வீற்றிருக்கிறார். தாயார் பெயர் அம்புஜவல்லி.
வைகுண்டத்தில் இருக்கும் நாராயணரை வழிபடுவதற்காக, சனகாதி முனிவர்கள் வருகை தந்தனர். அப்போது வைகுண்டத்தில் வாசல் காப்பாளர்களாக இருந்த விஜயன், ஜெயன் ஆகிய இருவரும், முனிவர்களைத் தடுத்தனர். இந்த நிலையில் நாராயணரே, வைகுண்ட வாசலைத் திறந்துகொண்டு வந்து முனிவர்களுக்கு காட்சி கொடுத்தார்.

அவரை தரிசனம் செய்த முனிவர்கள், தங்களுக்கு அனுமதி வழங்க மறுத்த ஜெயன், விஜயன் இருவரையும் அரக்கர்களாக பிறக்க சாபமிட்டனர். தானே அவர்களுக்கு சாப விமோசனம் அளிப்பதாக நாராயணர் கூறினார். அதன்படி பூலோகத்தில் பிறந்தவர்களே இரண்யாட்சனும், இரண்யகசிபுவும். இரண்யாட்சன் ஒரு முறை பூமியை களவாடி, கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அதனை வராக அவதாரம் எடுத்து திருமால் மீட்டதோடு, இரண்யாட்சனை வதம் செய்தார்.

உலகில் முதலில் தோன்றிய இடம் ‘வராகபுரி’ என்னும் கும்பகோணம் என்று இந்தக் கோவில் தல புராணம் சொல்கிறது. எனவே முதலில் இந்தக் கோவிலில் உள்ள ஆதிவராகப் பெருமாளை வழிபட்ட பிறகே, அனைத்து தெய்வங்களையும் வழிபட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அம்புஜவல்லி உடனாய ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில் என்று அழைக்கப்படும் இத்தலத்தில், மூலவராகவும் உற்சவராகவும் ஆதிவராகப் பெருமாள் வீற்றிருக்கிறார். தாயார் பெயர் அம்புஜவல்லி.
Tags:    

Similar News