உள்ளூர் செய்திகள்
.

தருமபுரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு முதல் நாள் தேர்வில் 1304 பேர் ஆப்சென்ட்

Published On 2022-05-07 09:55 GMT   |   Update On 2022-05-07 09:55 GMT
தருமபுரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு முதல் நாள் தேர்வில் 1304 பேர் தேர்வு எழுதவரவில்லை.
தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (6-ந் தேதி) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு  தொடங்கியது முதல் நாள் தேர்வில் 1304 மாணவர்கள் ஆப்சென்ட் 22,448 மாணவ மாணவிகள் மட்டும் தேர்வு எழுதினர்.

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 10ம் வகுப்பு பொது தேர்வு நேற்று (6-ந் தேதி) தொடங்கியது.
வரும் 30-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது மாவட்டத்திலுள்ள 218 அரசு பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் நலப்பள்ளி 5 உண்டு உறைவிடப்பள்ளி, 1 சமூக நலத்துறையின் பள்ளி, 16 சுயநிதி பள்ளிகள் மற்றும் 85 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 332 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 

இதில் 11,895 மாணவர்கள்,11033 மாணவிகள், என மொத்தம் 22,928 மாணவ, மாணவிகளும் 860 தனித்தேர்வர்கள் என மொத்தம் 23,788 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இத்தேர்வு பணிகளில் 1623 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும், 93 முதன்மை கண்காணி ப்பாளர்களும், 99 துறை அலுவலர்களும், 102 பறக்கும் படைகளும், 29 வழித்தட அலுவலர்களும், மாற்றுத்திறன் கொண்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுத உதவிக்காக 155 சொல்வதை எழுதுபவர்களும், 20 வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலர்களும் என மொத்தம் 2127 அலுவலர்கள், பணியாளர்கள், ஈடுபடுத்தப்பட்டனர்.

நேற்று முதல்நாள் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் தர்மபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தனித் தேர்வர்கள் என 23,788 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். நேற்று நடைபெற்ற முதல் நாள் தேர்வில் 22,448 பேர்  தேர்வு எழுதினர் 1304 மாணவர்கள்  ஆப்சென்ட் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News