உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தூத்துக்குடியில் போதைபொருள் பதுக்கிய 7 பேர் குண்டாசில் கைது

Published On 2022-01-13 10:11 GMT   |   Update On 2022-01-13 10:11 GMT
தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக ரூ.21 கோடி மதிப்பில் போதைபொருள் பதுக்கிய 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் தனிப்படை போலீசார் கடந்த 21-ந் தேதி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

 டூவிபுரம் பூங்கா அருகே சந்தேகப்படும்படியாக நின்ற அன்சர் அலி என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சமையல் குக்கரில் 162 கிராம் போதை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.

அவர் கொடுத்த தகவலின்பேரில் தருவைகுளம் ரோஸ்நகரை சேர்ந்த அந்தோணிமுத்து என்பவரின் வீட்டில்  ரூ. 21 கோடி மதிப்புள்ள 21 கிலோ ஹெராயின் என்ற போதை பொருள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.  

இதைத் தொடர்ந்து போதை பொருளை பதுக்கி தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த அன்சார்அலி (26), யோகீஸ்வர் காலனியை சேர்ந்த மாரிமுத்து  (26), டுவீபுரத்தை சேர்ந்த இம்ரான்கான் (27),   தருவைகுளம் அந்தோணி முத்து,   பிரேம்சிங், கசாலி, பாலமுருகன்  ஆகியோரை மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

 இவ்வழக்கின் மேற்படி எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ்  மாவட்ட   போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
அவரது அறிக்கையின் அடிப்படையில் எஸ்.பி., கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.  இவரது பரிந்துரையையேற்று கலெக்டர் செந்தில்ராஜ்  7 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

  அந்தோணி முத்து, பிரேம்சிங், கசாலி மரைக்காயர் ஆகிய 3 பேரையும் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
இந்நிலையில் மீதம் உள்ள அன்சார்அலி,  மாரிமுத்து, இம்ரான்கான், பாலமுருகன் ஆகிய 4 பேரும் குண்டர் சட்டத்தில் இன்று கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News