லைஃப்ஸ்டைல்
மாம்பழம் சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள்

மாம்பழம் சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள்

Published On 2021-07-16 07:24 GMT   |   Update On 2021-07-16 07:24 GMT
மாம்பழங்கள் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் உபாதைகளை அனுபவிக்க நேரிடும்.
உலக அளவில் இந்தியா தான் மிகச்சிறந்த மாம்பழ வகைகளை உற்பத்தி செய்து வருகிறது. அதிக சுவை, தரம் கொண்ட மாம்பழங்கள் இந்தியாவில்தான் விளைவிக்கப்படுகின்றன.

மாம்பழங்கள் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் உபாதைகளை அனுபவிக்க நேரிடும்.

நீர்: மாம்பழம் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். அது உடலுக்குள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். வயிற்றுவலி, அசிடிட்டி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
மாம்பழம்
சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து வேண்டுமானால் தண்ணீர் பருகலாம்.

தயிர்: சிலர் மாம்பழ துண்டுகளுடன் தயிர் கலந்து சாப்பிடுவார்கள். அது ருசியாகவும் இருக்கும். இருப்பினும் மாம்பழம் வெப்பமானது, தயிர் குளிர்ச்சியானது. அதனால் உடலில் வெப்பத்தையும், குளிரையும் ஒருசேர உருவாக்கும்போது சரும பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

பாகற்காய்: மாம்பழம் சாப்பிட்ட உடனேயே கசப்பு தன்மை கொண்ட எந்த பொருளையும் சாப்பிடக்கூடாது. குறிப்பாக பாகற்காய் போன்ற உணவுகளை சாப்பிடும்போது குமட்டல், வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

காரமான உணவு: மாம்பழம் சாப்பிட்ட பிறகு காரமான உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும். அவை வயிற்றுப்பிரச்சினைகளை ஏற்படுத்தும். சருமத்தில் எதிர்மறையான தாக்கத்தையும் உண்டாக்கும். முகப்பரு தோன்றுவதற்கும் வழிவகுக்கும்.

குளிர் பானம்: குளிர் பானங்களுடன் மாம்பழம் சாப்பிடுவதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மாம்பழத்தில் சர்க்கரை அதிகம் இருக்கிறது. குளிர் பானங்களிலும் சர்க்கரை அதிகம் கலந்திருக்கும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அப்படி மாம்பழம் சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிவிடும்.
Tags:    

Similar News