ஆட்டோமொபைல்

அதிநவீன அம்சங்களுடன் ரெனால்ட் டிரைபர் அறிமுகம்

Published On 2019-06-20 11:34 GMT   |   Update On 2019-06-20 11:37 GMT
ரெனால்ட் நிறுவனத்தின் புத்தம் புதிய எம்.பி.வி. கார் டிரைபர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.



ரெனால்ட் டிரைபர் எம்.பி.வி. சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டிரைபர் காரில் பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் சந்தையில் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளன. புதிய டிரைபர் கார் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ரெனால்ட் டிரைபர் கார் இந்தியாவில் பண்டிகை காலத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டிரைபர் காரில் பம்ப்பர் சற்று தடிமனாகவும், ஃபாக் லேம்ப் மற்றும் எல்.இ.டி. உள்ளிட்டவை அதிலேயே வழங்கப்பட்டுள்ளன. இதன் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப் பார்க்க பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.

இத்துடன் புதிய அலாய் வீல்கள், கேரக்டர் லைன், ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டில் கருப்பு நிற கிளாடிங், பிளேர்டு வீல் ஆர்ச்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரின் பின்புறம் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் பிரத்யேக டெயில் லேம்ப்கள், சிக்னல் இன்டிகேட்டர்கள், ரிவர்ஸ் லேம்ப் வழங்கப்பட்டுள்ளன.



ரெனால்ட் டிரைபர் கார் சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் டூயல் டோன் இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. டேஷ்போர்டு, ஸ்டீரிங் வீல் மற்றும் டோர் பேனல்களில் சில்வர் ட்ரிம் செய்யப்பட்டிருப்பது காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.

இத்துடன் 7.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது. 

புதிய ரெனால்ட் டிரைபர் கார் 1.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் ரெனால்ட் க்ளியோ மற்றும் சான்ட்ரியோ போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 71 பி.ஹெச்.பி. பவர், 96 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஈசி ஆர் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News