லைஃப்ஸ்டைல்
சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதால் உடல்நலத்துக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதால் உடல்நலத்துக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

Published On 2019-09-10 03:44 GMT   |   Update On 2019-09-10 03:44 GMT
சானிட்டரி நாப்கின்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் பெண்களுக்கு அரிப்பு, தோல் கருப்படைதல், பல்வேறு விதமான அலர்ஜிகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கண்டிப்பாக சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டுமென்று பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் அதே வேளையில் மருத்துவர்கள் அதற்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ளனர்.

சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பெண்கள் நல சிறப்பு மருத்துவரிடம் கேட்டபோது, "பொதுவாக பிளாஸ்டிக்கை அடிப்படையாக கொண்ட பல்வேறு வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் தற்கால சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு நல்லதைவிட அதிகளவில் தீங்கையே விளைவிக்கிறது. பல வருடங்களாக சானிட்டரி நேப்கின்களை பயன்படுத்துபவர்களுக்கே அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் சுகாதார பிரச்சனைகளுக்கு உள்ளாவது அடிக்கடி நடக்கிறது" என்கிறார்.

"சானிட்டரி நாப்கின்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் பெண்களுக்கு அரிப்பு, தோல் கருப்படைதல், பல்வேறு விதமான அலர்ஜிகள் மட்டுமின்றி மாதவிடாய் காலத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதால் வெள்ளைப்படுதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன" என்று மருத்துவர் சியாமளா கூறுகிறார்.



சானிட்டரி நாப்கின்களினால் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கான காரணம் குறித்து பேசிய அவர், "மாதவிடாய் காலத்தின்போது பெண்கள் நான்கு மணிநேரங்களுக்கு ஒரு சானிட்டரி நேப்கின் வீதம் ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு சானிட்டரி நேப்கின்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், பெரும்பாலான பெண்கள் காலை முதல் இரவுவரை ஒரே நாப்கின்னை பயன்படுத்துவது மிக அதிகபட்சமாக புற்றுநோயை கூட உண்டாக்கலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனினும், நடுத்தர, ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களால் ஒரு நாளைக்கு இத்தனை நாப்கின்களை பயன்படுத்துவெதெல்லாம் பொருளாதாரரீதியாக சாத்தியமே இல்லை" என்று விவரிக்கிறார்.

மாதவிடாய் காலத்தின்போது துணியை பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகளை முன்னிறுத்தியே சானிட்டரி நேப்கின்கள் சந்தையில் இடம்பிடித்த நிலையில், மீண்டும் துணியை பயன்படுத்துவதற்கான அவசியம் என்னவென்று கேள்வியெழுப்பியபோது, வெறும் துணியை பயன்படுத்துவதன் மூலம் சானிட்டரி நாப்கின்களினால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்த்துவிட முடியாது. அதை உருவாக்க தேர்ந்தெடுக்கப்படும் துணியின் தரம், தைக்கப்படும் விதம், பயன்படுத்தும் முறை, வெந்நீரால் அலசுவது, வெயிலில் உலர வைப்பது போன்ற படிநிலைகளை பின்பற்ற வேண்டும்.
Tags:    

Similar News