செய்திகள்
கோப்புபடம்

விதை பரிசோதனை - விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

Published On 2021-10-05 06:59 GMT   |   Update On 2021-10-05 06:59 GMT
விதைப் பரிசோதனை நிலையங்களில் விதையின் தரம் அறிய விதைப் பரிசோதனை செய்யப்படுகிறது.
திருப்பூர்:

விதைகள்தான் மகசூலுக்கான ஆதாரம். ஆனால் விதைகள் தரமற்றிருந்தால், மகசூல் கேள்விக்குறியாகிவிடும். தரமற்ற விதைகளால் லட்சக்கணக்கில் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்துள்ளனர். எனவே விதைகளின் தரத்தில் எப்போதுமே கவனமுடன் இருக்க வேண்டும்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறையின் கீழ் விதைச்சான்றளிப்பு, விதை ஆய்வு, விதை பரிசோதனை மற்றும் பயிற்சி குறித்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 

விதைப் பரிசோதனை நிலையங்களில் விதையின் தரம் அறிய விதைப் பரிசோதனை செய்யப்படுகிறது. முளைப்புத் திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற ரகக்கலப்பு கண்டறியப்பட்டு முடிவுகள் வழங்கப்படுகின்றன.

விதை மாதிரிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. விதைச்சட்டத்தின்படி ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்ச முளைப்புத்திறன் தரம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகுபடி செய்ய வாங்கும் விதைகளையோ, கைவசம் உள்ள விதைகளையோ விதைப்பதற்கு முன் முளைப்புத்திறன் அறிதல் அவசியம். எனவே ஆய்வு செய்து தரமான விதைகளை வாங்கி பயிரிட வேண்டும் என்றனர். 
Tags:    

Similar News