ஆன்மிகம்
புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தபோது எடுத்த படம்.

புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

Published On 2019-10-30 05:27 GMT   |   Update On 2019-10-30 05:27 GMT
புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரையில் தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதனை முன்னிட்டு 26-ந் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தேவார இன்னிசை, மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு நாம சங்கீர்த்தனம், இரவு 7 மணிக்கு ருத்ர ஏகாதசி நடைபெற்றது. நள்ளிரவு 12.57 மணிக்கு குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசத்தை தொடர்ந்து குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு 27, 28-ந் தேதிகளில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மாலை 4.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு 12.57 மணிக்கு குருப்பெயர்ச்சிக்கு பின்னரும் அதிகாலை 3 மணி வரை நடை திறக்கப்பட்டிருந்தது.

விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News