இந்தியா
பெங்களூரு நைஸ் ரோடு

பெங்களூரு நைஸ் ரோட்டில் நாளை முதல் இருசக்கர வாகனங்களுக்கு தடை

Published On 2022-01-15 01:55 GMT   |   Update On 2022-01-15 01:55 GMT
இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நைஸ் ரோட்டில் வருகிற 16-ந் தேதி (நாளை) முதல் இரவு 10 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு :

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகளை சரி செய்யும் விதமாக நைஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நைஸ் ரோட்டில் இரவு 10 மணிக்கு பின்பு வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றங்கள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. அத்துடன் இரவு 10 மணிக்கு மேல் நைஸ் ரோட்டில் விபத்துகள் நடந்து உயிர் பலி ஏற்படுவதும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்களை வழிமறித்து தான் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களும், அந்த வாகனங்கள் மீது தான் கார், லாரி பிற வாகனங்கள் மோதி விபத்துகள் நடப்பதும் அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நைஸ் ரோட்டில் வருகிற 16-ந் தேதி (நாளை) முதல் இரவு 10 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு தடை விதித்து பெங்களூரு போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடா உத்தரவு பிறப்பித்துள்ளார். வருகிற 16-ந் தேதியில் இருந்து இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை இருசக்கர வாகனங்கள் மட்டும் நைஸ் ரோட்டில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News