செய்திகள்
கோப்பு படம்.

திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை: 320 மதுபாட்டில்கள்-ஆட்டோ பறிமுதல்

Published On 2021-05-01 11:47 GMT   |   Update On 2021-05-01 11:47 GMT
திருப்பூர் மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரிடம் இருந்து 320 மதுபாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

தாராபுரம்:

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்கள் செயல்பட கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இதை மீறி செயல்படும் பார்களுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. அதன்படி தாராபுரம் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில் தாராபுரம் உப்புதுறைபாளையத்தில் உள்ள பாரில் விதிமுறைகளை மீறி மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த மாலிங்கா (வயது 25) என்பவரிடமிருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 5 முக்கு கார்னரில் உள்ள பாரில் கோபாலகிருஷ்ணன் என்பவ ரிடமிருந்து 26 பாட்டில்கள், மதுக்கம்பாளையம் பகுதியில் கதிர்வேல் என்பரிடமிருந்து 28 பாட்டில்கள் என மொத்தம் 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இதே போல் வாவிபாளையத்திலிருந்து பெருமாநல்லூர் செல்லும் சாலையில் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் சட்டவிரோதமாக விற்பனை செய்ய கொண்டு செல்வதும் அவர்கள் வாஷிங்டன் நகரை சேர்ந்த வெங்கடேஷ் (27), பெருமாநல்லூரை சேர்ந்த இசக்கிமுத்து (25) என தெரியவந்தது. அவர்களிட மிருந்து 240 மதுபாட்டி ல்களை ஆட்டோவையும் பறிமுதல் செய்து. 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மாவட்டத்தில் இது போன்று சோதனை நடத்தப்பட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News